உடல் எடையை சட்டென குறைக்க வேண்டுமா?அப்போ இந்த ஒரே ஒரு உணவை மட்டும் சாப்பிடுங்கள்
பெண்களில் சிலர் உடல் எடையை குறைப்பதற்காக பல விலை உயர்ந்த மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள். இதற்கு மாற்றாக நம் சமையலறையில் இருக்கும் ஒரு பொருளை பயன்படுத்தலாம்.
வயது அதிகரிக்கும்பொழுது உடலின் வளர்சிதை மாற்றம் குறைவதால் உடல் எடையும் அதிகரிக்க தொடங்குகிறது.
வளர்சிதை மாற்றத்தை தவிர உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, மாதவிடாய் அறிகுறிகள் போன்ற காரணங்களாலும் எடையில் ஏற்ற இறக்கங்களை தோன்றுகின்றன.
உடல் எடையை குறைப்பதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. குறைந்த செலவில் நம் வீட்டில் இருக்கக்கூடிய இஞ்சியை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.
இஞ்சி பசி மற்றும் வீக்கத்தை குறைக்கவும், செரிமானத்தை தூண்டவும் உதவுகிறது. இதில் உள்ள ஜிஞ்சரோல் எனும் சேர்மம் உடலில் பல உயிரியல் செயல்பாடுகளை தூண்டும் ஃப்ரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துகிறது.
இந்த தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் உடல் பருமன், புற்றுநோய் போன்ற பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
உடல் எடையை குறைக்கும் இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல் உடல் பருமனை குறைக்கும் தன்மையுடையது. இது உணவை வேகமாக ஜீரணிக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இவை அனைத்தும் எடை இழப்புக்கு வழிவகுக்கின்றன.
உடல் எடையை குறைக்கவும், பசியை கட்டுப்படுத்தும், செரிமான செயல்முறையின் போது அதிக கலோரிகளை எரிக்கவும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி எடுத்துக்கொள்ளும் முறை
இஞ்சியை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, சூடு குறைந்த பிறகு அதில் தேன் கலந்து குடிக்கலாம்.
நீங்கள் சமைக்கும் சூப், ஜூஸ், குழம்பு, காய்கறிகள் போன்ற எந்த உணவிலும் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சியை எந்த வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளைக்கு 4 கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
அதிகமான இஞ்சி ஆபத்து!
ஏதேனும் உடல்நல பிரச்சனைக்காக மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்தபின் இஞ்சியை எடுத்துக் கொள்வது நல்லது.
மேலும் இஞ்சியை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வாயு, வயிற்று வலி , வாயில் எரிச்சல் உணர்வு, வயிற்று பொருமல், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகளை உண்டாக்கிவிடும்.