14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்: பிரான்ஸ் அரசு துவக்கியுள்ள அவசர விசாரணை
பிரான்சில், 14 வயதுச் சிறுமி ஒருத்தியை, ஒரு பதின்ம வயதுப்பெண்ணும் இரண்டு பையன்களும் சேர்ந்து தாக்கியதில் அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, பிரான்ஸ் அரசு அவசர விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்
தெற்கு பிரான்சில் அமைந்துள்ள Montpellier என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் Samara என்னும் 14 வயதுச் சிறுமியை, அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவியும், இரண்டு மாணவர்களும் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்கள்.
தாக்கப்பட்டதால் அந்தச் சிறுமி கோமா நிலையை அடைந்தார். இந்த சம்பவம் பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Pascal Guyot/AFP/Getty Images
மூன்று பேர் கைது
தற்போது, Samara கோமாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, ஒரு 14 வயதுப் பெண்ணும், 14 மற்றும் 15 வயதுடையை இரண்டு பையன்களும் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அந்த 14 வயது சிறுமி, Samaraவைத் தாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், கல்வித்துறை அமைச்சரான Nicole Belloubet, இந்த சம்பவம் தொடர்பாக அவசர விசாரணை நடத்தி, எட்டு வேலை நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தனது அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், Samaraவைத் தாக்கிய அந்த 14 வயதுச் சிறுமி, இரண்டரையாண்டுகளாக தன் மகளுக்கு தொந்தரவு கொடுத்துவந்ததாக தெரிவித்துள்ள Samaraவின் தாயாகிய Hassiba, தன் மகள் மீதான தாக்குதலை அந்த 14 வயது சிறுமி ஸ்பான்சர் செய்ததாகவும், தன் மகளுடைய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அவளை வன்புணருமாறு கோரியிருந்ததாகவும், அதற்காக அவளை பள்ளி நிர்வாகம் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடைநீக்கம் செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |