பெற்றோர் கண்முன்னே 16 வயது சிறுமியை சீரழித்த கொடூரர்கள்! அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் பின்னணி
பழிவாங்கும் நோக்கில் 16 வயது சிறுமியை பெற்றோர்கள் முன்னிலையில் 8 பேர் சேர்ந்து சீரழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஜூன் 28-ஆம் திகதி, பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் சகோதரன், தான் காதலித்த டீனேஜ் பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார். இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் வீட்டு பெண்ணை கூட்டிக்கொண்டு சென்ற இளைஞனின் குடுப்பத்தை பழிவாங்க துடித்தனர்.
இதற்காக திட்டம் தீட்டி, ஜூன் 29-ஆம் திகதி ஓடிப்போன ஜோடி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதாக கூறி, இளைஞனின் குடும்பத்தை ஓரிடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு, அந்த இளைஞனின் பெற்றோரை கட்டி வைத்து அடித்தது மட்டுமல்லால், 16 வயது தங்கையை, ஓடிப்போன பெண்ணின் தந்தை, சகோதர்கள், மாமன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 ஆண்கள் மாறிமாறி துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தங்கள் கண் முன்னரே மகள் சீரழிவதை பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர்.
மறுநாள், இந்த விடயத்தை யாரிடமும் கூறினால் கொன்று விடுவோம் என அவர்கள் மூவரையும் மிரட்டி அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
பெற்றோர்கள் பொலிஸை அணுகியதாகவும், ஆனால் பொலிஸார் FIR பதிவு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர். அதன் பிறகு, பாதிக்கப்பட்ட சிறுமி, காவல்துறைக்குச் சென்று தனக்கு நடந்த கொடுமையை விவரித்த பிறகு, பொலிஸார் உடனடியாக புகாரை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்ஸோ சட்டம் உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்திருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் ஜூன் 27 அன்று அந்த இளம் ஜோடி ஓடிப்போனபோதன் விளைவாக இந்த கொடூர சம்பவம் நேர்ந்துள்ளது.