இங்கிலாந்தில் சிறுமி மீது இனவெறித்தாக்குதல்: மர்ம நபரைத் தேடும் பொலிசார்
இங்கிலாந்தில் 9 வயது சிறுமி ஒருத்தி வெள்ளையர் ஒருவரால் சுடப்பட்டாள். அது இனவெறுப்புத் தாக்குதலாக இருக்கக்கூடும் என பொலிசார் நம்புகிறார்கள்.
சிறுமி மீது இனவெறித்தாக்குதல்
இங்கிலாந்தின் பிரிஸ்டலிலுள்ள Brentry என்னுமிடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில், தனது வீட்டினருகே நின்றுகொண்டிருந்த 9 வயது சிறுமி ஒருத்தியை, சுமார் 17 அல்லது 18 வயதுடைய வெள்ளையின இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார்.
Chakeshill Drive, Bristol
அது ஏர்கன் வகை துப்பாக்கி என்பதால் அந்தச் சிறுமிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. என்றாலும், வலி மற்றும் அதிர்ச்சியால் பதிக்கப்பட்டுள்ள அந்தச் சிறுமி வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறாளாம்.
அந்தச் சிறுமியை துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞர், அவளை நோக்கி இனரீதியில் ஒரு மோசமான வார்த்தையைக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அந்த இளைஞரை தீவிரமாகத் தேடிவரும் பொலிசார், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களுடைய உதவியையும் நாடியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |