ஜேர்மனிக்கு அகதியாக வந்த சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்
ஜேர்மனிக்கு அகதியாக வந்த சிறுமி ஒருத்தி மாயமான நிலையில், அவளது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான சிறுமி சடலமாக மீட்பு
ஜேர்மனியின் Saxony மாகாணத்தில், 9 வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். ஜூன் 3ஆம் திகதி பள்ளிக்குச் சென்ற அவள் வீடு திரும்பவேயில்லை.
2022ஆம் ஆண்டு தன் தாயுடன் உக்ரைனிலிருந்து ஜேர்மனி வந்த அந்தச் சிறுமி மாயமான அந்த விடயம் ஜேர்மனி முழுவதும் தலைப்பு செய்தியானது. அவள் வசித்துவந்த Döbeln என்னுமிடத்தைச் சுற்றிலும், 400க்கும் அதிகமான பொலிசார் அவளைத் தீவிரமாக தேடிவந்தார்கள்.
Image: Robert Michael/dpa/picture alliance
இந்நிலையில், அவள் வீட்டிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில், அடர்த்தியான புதர்களுக்குள், அவளது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கொலை என சந்தேகம்
அவள் பாலியல் ரீதியாக தாக்கப்படவில்லை என்று கூறியுள்ள பொலிசார், அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.
ஆகவே, அவளது உயிரிழப்புக்குக் காரணமான நபரை தேடும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளார்கள். கூடுதல் சோகம் என்னவென்றால், உயிரிழந்த அந்த சிறுமியின் தந்தை இன்னமும் உக்ரைனில்தான் இருக்கிறார் என்பதுதான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |