பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் புகைப்படம் உட்பட முக்கிய தரவுகளை வெளியிட்ட அதிகாரிகள்
பிரித்தானியாவில் 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தந்தை உட்பட மூவருக்கு தொடர்பிருப்பதாக அறிவித்திருந்த அதிகாரிகள் தற்போது புகைப்படங்கள் உட்பட புதிய தரவுகளை வெளியிட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட மூவர்
ஹார்சல் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி சாரா ஷெரீப் வழக்கில் அவரது தந்தை, பாகிஸ்தானை சேர்ந்த உர்ஃபான் ஷெரீப் என்பவர் 999 இலக்கத்திற்கு தகவல் தெரிவித்திருந்ததாக உறுதி செய்துள்ளனர்.
@PA
சிறுமியின் இறப்பை விசாரித்துவரும் சர்ரே மற்றும் சசெக்ஸ் பொலிஸ் அதிகாரிகள், இந்த வழக்கில் மூவரை அடையாளம் கண்டுள்ளதாகவும்,
அதில் ஒருவர் சிறுமியின் தந்தை உர்ஃபான் ஷெரீப் எனவும் இன்னொருவர் அவரது துணைவி 29 வயதான பெய்னாஷ் படூல் எனவும் உர்ஃபானின் சகோதரர் 28 வயது பைசல் மாலிக் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுமியின் உடற்கூறு ஆய்வில், உரிய மரண காரணம் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட காலமாக சிறுமி சாரா கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார் என்றும், காயங்கள் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
@PA
சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம்
இதனால், சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், பொதுமக்கள் உதவி இன்றி இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
உர்ஃபான் மற்றும் அவரது சகோதரர், துணைவியுடன் சிறுமி சாராவின் சடலம் மீட்கப்படுவதற்கும் ஒருநாள் முன்னர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு சென்றுவிட்டதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடன் 5 சிறுவர்கள் வசித்து வந்துள்ளதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர். இதனிடையே, சிறுமி சாராவின் தாயார் ஓல்கா ஷெரீப் தெரிவிக்கையில், எனது வாழ்க்கை இனி முன்பு போல ஒருபோதும் இருக்காது. சாரா இப்போது என்னுடன் இருக்க வேண்டியவள் என கண்கலங்கியுள்ளார்.
போலந்தில் பிறந்தவரான ஓல்கா, தமது ஒரே மகளின் மரணத்திற்கு பின்னர் தூக்கத்தை தொலைத்தவராக அவதிப்பட்டு வருகிறார். உள்ளூர் டாக்சி சாரதியான உர்ஃபான் ஷெரீப்பை 2009ல் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ஓல்கா, 2017ல் விவாகரத்து பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |