பெற்றோர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மகள்! துயர சம்பவம்
இந்திய மாநிலம் கேரளாவில் தந்தையின் கண் முன்னே ஒன்பதாவது மாடியில் இருந்து சிறுமி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் ஆனந்த் சிங். வியாழக்கிழமை மதியம் தாமதமாக குடியிருப்புக்கு திரும்பியுள்ளார் ஆனந்த் சிங்.
இந்த வேளை அலறியபடி அவரது மனைவி குடியிருப்புக்கு வெளியே செல்வதை அறிந்த ஆனந்த் சிங் பதறிப்போய் அவரும் கீழே சென்றுள்ளார். இந்த நிலையிலேயே தங்களது ஒன்பதாவது மாடி குடியிருப்பில் இருந்து மகள் பவ்யா(16) குதித்து தற்கொலை செய்து கொண்டதை ஆனந்த் சிங் தெரிந்து கொண்டுள்ளார்.

ஆனந்த் சிங் மற்றும் அவரது மனைவி, இரு மகள்களுடன் ஒன்பதாவது மாடியில் குடியிருந்து வந்துள்ளார். தமது வாகனத்தில் இருந்து வெளியேறி, குடியிருப்பின் லிஃப்டில் ஆனந்த் சிங் நுழைந்த அதே வேளை, அவரது மகள் பவ்யா கீழே குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கால் தடுக்கி விழுந்தாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        