அப்பாவின் கண் முன்னே பறிபோன மகளின் உயிர்! நெஞ்சை பதற வைத்த சம்பவம்
தமிழக மாவட்டம் கடலூரில் சிறுமி ஒருவர், சாலை விபத்தில் தனது தந்தையின் கண் முன்னே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மகள் ஜானுஷிகா 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தந்தையுடன் சிறுமி இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அவர்களது வாகனம் சிலுவைபுரம் அருகே சென்றபோது திடீரென லொறி ஒன்று மோதியது.
இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். ஜம்புலிங்கம் உயிர்தப்பிய நிலையில், அவரது மகள் மீது லொறியின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக விபத்து நடந்த பகுதிக்கு சென்றனர்.
ஜம்புலிங்கத்தை சிகிச்சைக்காக அனுப்பி வைத்த பொலிஸார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தையின் கண் முன்னே மகள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |