லண்டனில் இந்திய இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை: நேற்று மாலை நடந்த துயர சம்பவம்
லண்டனில், நேற்று மாலை இந்திய இளம்பெண் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவல்
நேற்று மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிசார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
Sky News
உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அந்தப் பெண் ஒரு இந்தியர் என்றும், சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
23 வயது நபர் கைது
இந்த துயர சம்பவம் தொடர்பாக, அதே வீட்டிலிருந்த 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
The Sun
அவருக்கும் தலையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |