ஏன் என்னை ஏமாற்றினாய்? உலகக்கோப்பையை வென்ற கேப்டனின் கன்னத்தில் அறைந்த காதலி! வீடியோ வெளியானதால் பறிபோகும் வாய்ப்பு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை அவரது காதலி கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகியுள்ளது.
மைக்கேல் கிளார்க்
கடந்த 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் மைக்கேல் கிளார்க்.
41 வயதாகும் கிளார்க் ஓய்வு பெற்ற நிலையில் குயின்ஸ்லாந்தில் உள்ள நூசாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். அங்கு வந்த அவரது காதலி யார்ப்ரோ, கிளார்க்கை கடுமையாக வசைபாடினார். மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் கிளர்க்கின் கன்னத்தில் அறைந்தார்.
அவரை சமாதானப்படுத்த கிளார்க் தொடர்ந்து முயற்சித்தார். யார்ப்ரோ தொடர்ந்து அவரை குற்றம்சாட்டினார்.
வைரலான வீடியோ
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், 'அவளை உங்களுடன் இந்தியாவுக்கு அழைத்து போவீர்களா?' என யார்ப்ரோ கத்துகிறார்.
Michael Clarke and Karl Stefanovic have squared off in a wild fracas in a public park, in which Clarke was slapped across the face by his girlfriend and accused of cheating.
— SuperCoach IQ (@SuperCoachIQ) January 18, 2023
Michael Clarke Video#YouFuckedHerOnDecember17 pic.twitter.com/pbiLUpLnnc
மேலும் அவர் மோசமான வார்த்தைகளால் கிளார்க்கை தொடர்ந்து திட்டினார். இந்த வீடியோ குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
@Reuters
பறிபோகும் வாய்ப்பு
இதற்கிடையில் இந்த வீடியோவினால் கிளார்க் தோல் பராமரிப்பு பிராண்டுடனான ஒப்பந்தத்தை இழந்துவிட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்களில் அறிக்கைகள் கூறுகின்றன.
அத்துடன் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான வர்ணனையாளர் ஒப்பந்தத்தையும் கிளார்க் இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
@jadeyarbrough/Instagram