தாய் மற்றும் சகோதரனால் கோடாரியால் வெட்டி கொல்லப்பட்ட பெண்! அதிர்ச்சியூட்டும் காரணம்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் தாய் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து, பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டில் சடலம்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மான்புரா காட்டில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி, பெண்ணின் சடலமிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இறந்த பெண் சோனு என்றும், அவர் மான்புரா காட்டிற்கு அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
@istock
இதனை தொடர்ந்து சோனு என்ற அந்த பெண் கூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நினைத்துள்ளனர்.
ஆனால் பிரேத பரிசோதனையில் சோனு துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. இதனால் காவல்துறைக்கு இந்த வழக்கில் சந்தேகம் எழுந்துள்ளது.
தாய் மற்றும் சகோதரனால் கொலை
இந்நிலையில் காவல்துறையினர் இறந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது சகோதர் ஆகியோரை அழைத்து விசாரணையில் நடத்தியுள்ளார்.
@gettyimages
தீவிர விசாரணையின் பின்பு, சோனு தன்னுடைய காதலனான அஜ்மல் என்பவரோடு போனில் பேசி வந்துள்ளார், இதனை அவரது தாய் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து சோனு தன்னுடைய காதலனோடு பேசி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரன் கோடாரியால் தாக்கி சோனுவை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளார்.
ஆனால் பொலிஸாரிடம் சிக்கிவிட கூடாது என்பதற்காக இறந்த பெண்ணின் சடலத்தை அருகிருந்த காட்டில் போட்டுள்ளார்.
@gettyimages
இதனை தொடர்ந்து காவல்துறை இருவரையும் கைது செய்துள்ளது. மேலும் இருவரும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற்து.