பிரான்சில் திடீரென மைதானத்தில் நுழைந்து கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொண்ட பெண்! வீடியோ
பிரான்சின் பாரிஸ் நகரில் டென்னிஸ் மைதானத்தில் நுழைந்த பெண் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டி நடந்தது.
அப்போது பெண்ணொருவர் போட்டியின்போது திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் தனது கழுத்தை டென்னிஸ் வலையில் கட்டிக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவரது ஆடையில் இன்னும் 1028 நாட்கள் மட்டுமே உள்ளது என எழுதப்பட்டிருந்தது. இது ஐ.நா குறிப்பிட்ட காலநிலை குறித்த எச்சரிக்கை வாசகம் ஆகும்.
A protester has attached herself to the net at the French Open pic.twitter.com/jSUFDGFhsz
— CJ Fogler AKA Perc70 #BlackLivesMatter (@cjzero) June 3, 2022
அதனைத் தொடர்ந்து, அலிஸி (22 ) என்ற அப்பெண் வலையில் இருந்து மீட்கப்பட்டார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
— doublefault28 (@doublefault28) June 3, 2022
இதுதொடர்பாக குறித்த பெண்ணிடம் விசாரித்தபோது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே மைதானத்திற்குள் வந்ததாக தெரிவித்துள்ளார்.
Photo Credit: Getty Images
Photo Credit: Getty Images