கிராமத்தில் ஆடு மேய்க்கும் 15 வயது சிறுமியின் உடல் இயக்க நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம்! விசாரித்த தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் ஆடு மேய்க்கும் சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மழவங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் அகமதுஜலீல் (66). இவர் காலையில் மளிகை வியாபாரமும், மாலையில் ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, 10ம் வகுப்புவரை படித்துள்ளார். மேற்கொண்டு பள்ளியில் சேராத சூழ்நிலையில், மாடு, ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, சிறுமி ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது, சிறுமியை அகமது ஜலில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை பார்த்த, அதே கிராமத்தை சேர்ந்த இன்னொரு வாலிபர் அந்த சிறுமியிடம், நான் பார்த்ததை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி, அவரும் பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் உடல் இயக்க நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை கண்ட தாயார் விசாரித்தார். அப்போது, நடந்ததை சிறுமி கூறிய நிலையில் அதை கேட்டு தாயார் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து சிறுமியின் தாய், வந்தவாசி அனைத்து மகளிர் பொலிசில் புகாரளித்தார். பொலிசார் விசாரித்து, அகமது ஜலிலை போக்சோவில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.