சிறைக்கு செல்லும்போது கொல்லப்படுவார்கள்! உன் மரணத்தை மறக்கமாட்டேன் - காதலியின் பயங்கர எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவில் தனது காதலன் கொல்லப்பட்டதற்கு பெண்ணொருவர் பயங்கரமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொடூரமான தாக்குதல்
நியூ சௌத் வேல்ஸின் மேற்கு கடற்கரையில் உள்ள பூங்கா ஒன்றில், திங்கட்கிழமை அதிகாலை கோர்டன் கெஸ்ஸி (Gordon Kessey) என்ற 44 வயது நபர் இறந்து கிடந்தார்.
மேலும் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு நபர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடி வருகிறார்.
அதிகாலை 2 மணியளவில் அலறல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. செயின்ஸா (சங்கிலி ரம்பம்) ஆயுதத்தால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூரமான தாக்குதல் பற்றிய செய்தி கடலோர நகரம் முழுவதும் வேகமாக பரவியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமான எச்சரிக்கை
கொல்லப்பட்ட கெஸ்ஸி, போதைப்பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என்பதால் கொடிய மோதலுக்கு காரணம் அதுவாக இருக்குமோ என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கெஸ்ஸியின் காதலி அமண்டா மான்டன் சமூக ஊடகங்களில் பயங்கரமான எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் உன்னை இழக்கிறேன் கோர்டன். நாம் ஒன்றாக இருந்த 11 ஆண்டுகளில் நான் என் முழு மனதுடன் நேசித்தேன்.
கவலைப்படாதே, உன் மரணத்தை மறக்க முடியாது, நான் செய்தது போல் உன்னை நேசித்தவர்கள் கண்டிப்பாக அந்த நாய்களை சுவாசிக்காமல் பார்த்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும்.
அந்த நாய்கள் சிறைக்கு செல்லும்போது கொல்லப்படுவார்கள். சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் என்னவனை கொன்றுவிட்டார்கள். அவர்கள் தப்பித்துவிட்டதாக நினைக்கிறார்கள். கொல்லத் தயாராக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |