பிரித்தானியாவில் கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண்!
கேரளாவை சேர்ந்த 16 வயது டீன் ஏஜ் பெண் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த இளம்பெண்
கயலா ஜேக்கப் (16) என்ற டீன் ஏஜ் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கயலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவர் அசௌகரியமாக உணர்ந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை.
உயிரிழப்பு
இதையடுத்து கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கயலாவின் குடும்பத்தார் கேரளாவின் தொடுபுழாவை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர்.
அவரின் மரணம் குடும்பத்தினரை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவிலேயே கயலாவின் இறுதிச்சடங்குகள் நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.