கனடாவில் துப்பாக்கி குண்டடி பட்ட நிலையில் படுகாயத்துடன் தரையில் கிடந்த 19 வயது இளம்பெண்! சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ்
கனடாவில் 19 வயது இளம்பெண் தலையில் துப்பாக்கி குண்டுகள் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிராம்டனில் தான் இந்த சம்பவம் திங்கட்கிழமை நடந்துள்ளது. அன்றைய தினம் Ardglen Drive and Wilton Drive பகுதியில் இருந்து பொலிசாருக்கு ஒரு தகவல் வந்தது. அங்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது 19 வயதான இளம் பெண் தலையில் துப்பாக்கி குண்டடி பட்ட நிலையில் படுகாயத்துடன் தரையில் கிடந்தார்.
அங்கு அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவரின் உயிருக்கு ஆபத்தில்லை எனவும், தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.