இளவரசர் வில்லியமுடன் நிச்சயதார்த்தம் ஆன நாள் முதல் இளவரசி கேட்டுடனேயே காணப்படும் பெண்: யார் அவர்?
10 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஒருவர் இளவரசி கேட்டுடன் காணப்படுவதை பலரும் கவனித்திருக்கலாம்.
இளவரசர் வில்லியமும் அவரை கௌரவித்திருக்கிறார்.
வேல்ஸ் இளவரசரான வில்லியமுடைய மனைவி கேட்டுடன் கூடவே எப்போது ஒரு பெண் இருப்பதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணமுடியும்.
யார் அவர்?
அவர், Sergeant Emma Probert, 2010ஆம் ஆண்டு இளவரசர் வில்லியமுக்கும், கேட்டுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நாள் முதற்கொண்டு, இளவரசி கேட்டை பாதுகாக்கும் பாதுகாவலர் அவர்.
Image: Max Mumby/Indigo/Getty Images
சமீபத்தில் பக்கிங்காம் மாளிகையில் நிகழ்ந்த விழா ஒன்றில் இளவரசர் வில்லியம், தன் மனைவியின் பாதுகாவலராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இந்த எம்மாவுக்கு விருது வழங்கி அவரை கௌரவித்தார்.
எம்மா, ராஜகுடும்ப பாதுகாவராக பொறுப்பேற்கும் முன் பொலிசாராக பயிற்சி பெற்றவர் ஆவார். 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி லண்டன் குண்டு வெடிப்புகளின்போது அவர் பொலிசாராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
எம்மா முறைப்படி மார்ஷியல் ஆர்ட் கற்றவர். எப்போதும் குண்டு துளைக்காத உடை அணிந்திருக்கும் அவர், துப்பாக்கி, டேசர் முதலான ஆயுதங்களுடன் இளவரசி கேட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
Image: PA