உணவகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
அமெரிக்காவில், உணவகம் ஒன்றிற்கு துப்பாக்கியுடன் வந்த பெண்ணொருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உணவகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த பெண்
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள உணவகம் ஒன்றில் பெண்ணொருவர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்தப் பெண் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த உணவகத்தின் கார் பார்க்கிங்குக்குச் செல்ல, பொலிசார் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.
அவர் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், மக்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதற்காக பொலிசார் மூவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த சம்பவத்தின்போது பொலிசார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அது அந்தப் பெண் துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட காயமா அல்லது துப்பாக்கியால் சுடும்போது குண்டு வேறு ஏதாவது ஒரு பொருளின் மீது பட்டு அந்த பொருள் தெறித்ததால் ஏற்பட்ட காயமா என்பது தெரியவரவில்லை.
அந்தப் பெண்ணின் பெயர் முதலான எந்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |