ஒரே நேரத்தில் 23 காந்தங்களை விழுங்கிய பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி! பின்னர் நடந்தது என்ன?
இங்கிலாந்தில் 6 வயது சிறுமி ஒரே நேரத்தில் 23 காந்தங்களை விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சசெக்ஸில் வசித்து வருபவர் 6 வயது சிறுமி. இவர் டிக்டாக் சவாலை முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஒரே நேரத்தில் 23 காந்தங்களை விழுங்கியுள்ளார்.
இதனால் சிறுமிக்கு தொடர்ந்து வயிறு வலி இருந்ததாகவும் குமட்டல், அடிக்கடி வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் பரிதாப நிலையை கண்டு அதிர்ந்த பெற்றோர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள 23 காந்தங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். எனினும் குடலுக்கிடையில் காந்தங்கள் சிக்கி காயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் சரியான நேரத்திற்கு சிறுமியை கொண்டுவர தவறி இருந்தால் சிறுமியின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும். அத்துடன் பல வித போராட்டத்திற்கு பிறகு தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறாள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.