குடிசை வீட்டை இடித்தபோது ஓடிச்சென்று புத்தகங்களை எடுத்த சிறுமி.., உச்சநீதிமன்ற நீதிபதி அதிர்ச்சி
குடிசை வீட்டை இடித்தபோது ஓடிச்சென்று புத்தகங்களை எடுத்த 8 வயது சிறுமி உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சிறுமியின் வியக்க வைக்கும் செயல்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், அம்பேத்கர் நகரில் கடந்த மார்ச் 21-ம் திகதி அன்று சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது, குடிசை பகுதிக்கு அருகே இருந்த கொட்டகை தீப்பற்றியது.
அப்போது அங்கிருந்த அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமி குடிசை பகுதிக்கு சென்றார். அங்கிருந்து, ஆங்கிலம், கணிதம், இந்தி புத்தகங்களை கொண்ட ஸ்கூல் பையை எடுத்துவிட்டு ஓடி வந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு விசாரணையில் இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறினர்.
இதுகுறித்து நீதிபதி புயான் கூறுகையில், "அண்மையில் குடிசை இடிக்கப்பட்டது. அப்போது குடிசை பகுதியில் இருந்து சிறுமி ஒருவர் புத்தகங்களுடன் ஓடி வருவது ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என்றார்.
மேலும், 1-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கூறுகையில், "எனது புத்தகங்களும் பையும் எரிந்துவிடுமோ என்ற பயத்தில் தான் அதனை எடுத்துவிட்டு அம்மாவிடம் திரும்பினேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |