40 ஆண்டுகளாக தொல்லை கொடுத்துவந்த கருப்புக்கண் சிறுமியின் ஆவி: ட்ரோன் கமெராவில் சிக்கிய காட்சி
வழிப்போக்கர்களுக்கு 40 ஆண்டுகளாக தொல்லை கொடுத்துவந்த ஆவி ஒன்று ட்ரோன் கமெராவில் சிக்கியுள்ளது.
காட்டில் உலவும் கருப்புக்கண் சிறுமி
இங்கிலாந்திலுள்ள Cannock Chase என்னும் இடம் பிரித்தானியாவிலேயே பயங்கர ஆவிகள் நடமாடும் இடம் என கருதப்படுகிறது.
அங்கு கருப்புக்கண் சிறுமி என அழைக்கப்படும் ஒரு சிறுமியின் ஆவி உலவுவதாக நீண்ட காலமாக கூறப்பட்டுவருகிறது. Robert Pulme என்னும் ஆவிகள் நிபுணர், கருப்புக்கண் சிறுமி உண்மையாகவே உலவுவதாக நம்புகிறார்.
வழிப்போக்கர்களை திகிலடையவைக்கும் ஆவி
Cannock Chase பகுதி வழியாக செல்லும் வழிப்போக்கர்கள் பலர் அந்த கருப்புக்கண் சிறுமியைப் பார்த்திருக்கிறார்களாம். முதலில் வழிதப்பிய ஒரு சிறுமியைப்போல அந்த சிறுமி காணப்படுவாளாம்.
ஐயோ பாவம், ஒரு சிறுமி வழிதப்பிக் காட்டுக்குள் வந்துவிட்டாளே என வழிப்போக்கர்கள் பரிதாபப்படும் நேரத்தில், அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே திடீரென அவள் மறைந்துபோக, அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கதிகலங்கிப்போவார்களாம்.
தற்போது ட்ரோன் கமெரா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்றில் அவளது உருவம் சிக்கியுள்ளது.
அந்தச் சிறுமி, 1800களில் டிப்தீரியா நோயால் இறந்த ஒரு சிறுமி என்றும், அந்த நோய் காரணமாக அவளது கண்களின் கீழே கருப்பு நிறம் ஏற்பட்டு, கண்களின் கீழே குழி விழுந்திருக்கலாம் என்றும் Robert Pulme கருதுகிறார்.
வேறு சிலர், அந்தச் சிறுமி, அதே பகுதியில் மூன்று சிறுமிகளைக் கொன்ற Raymond Morris என்னும் சீரியல் கில்லரால் கொல்லப்பட்டதாக நம்புகிறார்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.