காதலனின் தவறான ஆசைகளை நிறைவேற்ற உதவிய காதலி: 30 ஆண்டு வழக்கில் மற்றொரு முன்னேற்றம்

France
By Balamanuvelan Nov 27, 2023 10:34 AM GMT
Report

தன் காதலனின் தவறான ஆசைகளை நிறைவேற்ற உதவிய பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட 30 ஆண்டு வழக்கில், மற்றொரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கன்னிப்பெண்களை சீரழிக்கப்பட்ட ஆசைப்பட்ட காதலன்

பிரான்சில் பிறந்த Michel Fourniret என்பவர், 1966ஆம் ஆண்டு, இளம்பெண் ஒருத்தியை பாலியல் ரீதியாக தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த காலத்தில் Michelக்கு, Monique Olivier என்ற பெண்ணுடைய பேனா நட்பு கிடைத்துள்ளது . அந்தப் பெண்ணுக்கு எழுதிய கடிதங்களில் தனது மனதிலுள்ள தவறான ஆசைகளையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார் Michel.

காதலனின் தவறான ஆசைகளை நிறைவேற்ற உதவிய காதலி: 30 ஆண்டு வழக்கில் மற்றொரு முன்னேற்றம் | Girlfriend Helped Fulfill Her Lover Wrong Desires

Photograph: François Nascimbeni/AFP/Getty Images

கன்னிப்பெண்களாக தேர்வு செய்து, அவர்களை சீரழித்துக் கொலை செய்யவேண்டும் என்பது தனது ஆசை என Michel கூற, தனது கணவனைக் கொலை செய்ய உதவினால் Michelஉடைய ஆசைகளை நிறைவேற்ற உதவுவதாக வாக்களித்துள்ளார் Monique.

1987ஆம் ஆண்டு Michel விடுதலை பெற, Moniqueக்கும் அவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இருவருமாக சேர்ந்து இளம்பெண்களைக் குறிவைத்துள்ளார்கள்.

காரில் லிஃப்ட் தருவதாக Monique இளம்பெண்களை ஏமாற்றி அழைத்துவர, கூடவந்து இணைந்துகொள்ளும் Michel அந்த இளம்பெண்களை வன்புணர்ந்து கொலை செய்வார்.

சிக்கிய பிரித்தானிய இளம்பெண்

இப்படி சுமார் ஒன்பது இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் இங்கிலாந்திலுள்ள Newnham என்ற இடத்தைச் சேர்ந்த Joanna Parrishம் ஒருவர்.

1990ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Auxerre என்ற இடத்தில் Joannaவின் உடல் கிடைத்த நிலையில், அவரையும் தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் Michel. ஆனால், விசாரணை துவங்கும் முன்பே, 2021ஆம் ஆண்டு, Michel மரணமடைந்துவிட்டார்.

காதலனின் தவறான ஆசைகளை நிறைவேற்ற உதவிய காதலி: 30 ஆண்டு வழக்கில் மற்றொரு முன்னேற்றம் | Girlfriend Helped Fulfill Her Lover Wrong Desires

Photograph: PA

மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் குற்றவாளியின் காதலி

அதைத் தொடர்ந்து, Michelஇன் காதலியாகிய Monique மீது Joannaவின் கடத்தல், கொலை மற்றும் வன்புணர்வுக்கு உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தற்போது 75 வயதாகும் Monique, ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கிறார்.

இந்நிலையில், அவர் வரும் செவ்வாய்க்கிழமை, பாரீஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார். பல ஆண்டுகளாக பிரான்ஸ் நீதித்துறை தங்களை கைவிட்டுவிட்டதாக குற்றம் சாட்டியிருந்த Joannaவின் பெற்றோர், தங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிலையில், Monique ஆஜர் செய்யப்படும்போது ஏதாவது பயனுள்ள தகவல் கிடைப்பதற்கு இது இறுதி வாய்ப்பு என்பதால், விசாரணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US