பெண்கள் ஏன் அதிகமாக சிக்கன் சாப்பிடக்கூடாது தெரியுமா? பலருக்கும் தெரியாத எச்சரிக்கை தகவல்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக சிக்கன் இருக்கின்றது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல சிக்கனை அதிகம் சாப்பிட்டால் உடலில் பலவிதமான பிரச்சனைகளை உருவாக்கும்.
அதுவும் பெண்கள் முடிந்த அளவிற்கு சிக்கன் சாப்பிடுவதை கட்டுப்படுத்துங்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர். சிக்கனில் ருசியை விட பக்கவிளைவுகள் தான் அதிகம்.
பிராய்லர் கோழி வளர்ப்பில் ஸ்டிராய் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு பயங்கர கேடு விளைவிப்பவை. கோழிகள் சீக்கிரம் வளர வேண்டும் என்பதால் குறிப்பிட்ட வேதி பொருள் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் கோழிகள் 28இல் இருந்து 45 நாட்களுக்குள் வளர்ந்து இறைச்சி தயாராகி விடுகின்றது. சரி வாங்க சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி பார்க்கலாம்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:-
கோழி மற்றும் புரதச் சத்து அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் இருதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கோழிக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வதால் நமது உணவில் 10 முதல் 35 சதவிகிதம் புரதம் கிடைக்கிறது.அந்தப் புரதம் அதிகமாக சேரும்போது உடலில் கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் எடையும் அதிகரிக்கும். மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் உயர்த்தும்.
அதிக கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் அதிகமான புரதங்கள் உடலுக்குச் சென்று மறைமுகமாக இதய பிரச்சனைகள் உண்டாகும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
மருந்துகள் மூலம் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வரும்போது பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றோம்.இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.
சிக்கனை தினமும் சாப்பிடுவதால் அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைவதற்கு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது.