பிரான்சில் பள்ளி துவங்கிய முதல் நாளே வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள் பலர்: பின்னணியில் உடை
பிரான்சில் பள்ளி துவங்கிய முதல் நாளே, பள்ளிக்கு வந்த மாணவிகள் பலர் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
காரணம் என்ன?
பிரான்ஸ் அரசு, கடந்த மாதம், பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் அபாயா (abaya) என்னும் உடலை மறைக்கும் அங்கியை அணிய தடை விதித்தது. அது கல்வியில் மதச்சார்பின்மை விதிகளை மீறுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
France is to ban pupils in state-run schools from wearing the abaya – a loose-fitting robe worn by many Muslim women and girls.
— Al Jazeera English (@AJEnglish) August 29, 2023
Al Jazeera's @natachabut says the country’s education minister deems the garment a religious symbol which violates French secularism ⤵️ pic.twitter.com/3CKu2h3ShK
ஏற்கனவே பள்ளிகளில் மதம் சார்ந்த, தலையில் அணியும் ஸ்கார்ப், கழுத்தில் அணியும் சிலுவை, தலையில் அணியும் கிப்பா என்னும் தொப்பி முதலான விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அபாயாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட மாணவிகள்
ஆனாலும், பள்ளி துவங்கிய முதல் நாள் அன்று, சுமார் 300 இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு அபாயா அணிந்துவந்துள்ளனர். அவர்களில் பலர் அதை அகற்ற ஒப்புக்கொண்ட போதிலும், 67 மாணவிகள் அபாயாவை அகற்ற மறுத்துள்ளனர்.
ஆகவே, அவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரான்ஸ் கல்வி அமைச்சரான Gabriel Attal தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |