விக்கிபீடியாவை டிக்கிபீடியா என மாற்றினால் 1 பில்லியன் டாலர் தருகிறேன்: எலான் மஸ்க் கிண்டல்
விக்கிபீடியா பெயரை டிக்கிபீடியா என்று மாற்றினால் 1 பில்லியன் டாலர் நன்கொடை கொடுக்கிறேன் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் பதிவு
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, ட்விட்டர் உள்ளிட்ட பல பெருநிறுவனங்களின் உரிமையாளரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
I will give them a billion dollars if they change their name to Dickipedia https://t.co/wxoHQdRICy
— Elon Musk (@elonmusk) October 22, 2023
அவர் தனது பதிவில், "இணைய களஞ்சியமான விக்கிபீடியா தனது பெயரை டிக்கிபீடியா என்று மாற்றினால் 1 பில்லியன் டாலர் நன்கொடை கொடுக்கிறேன்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
நன்கொடை கேட்கும் விக்கிபீடியா
அண்மையில், விக்கிபீடியா தனது பயனர்களிடம் நன்கொடை சேகரித்து வந்தது. அதனை விமர்சிக்கும் வகையில் தான் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், தன்னை பற்றிய இந்த கருத்தையும் விக்கிப்பீடியாவில் சேர்க்குமாறும் கூறியுள்ளார்.
மேலும், எலான் மஸ்க் தன்னுடைய மற்றொரு பதிவில், "விக்கிபீடியா விற்பனைக்கு அல்ல என்ற செய்தியை பகிர்ந்து ஏன் விக்கிபீடியாவுக்கு இவ்வளவு நிதி தேவைப்படுகிறது. விக்கிபீடியாவை இயக்க இது நிச்சயமாக தேவையில்லை" எனக் கூறியுள்ளார்.
அதாவது அவர், விக்கிபீடியா கட்டுரைகள் அனைத்தையும் உங்களை மொபைலிலே சேமித்து வைக்க முடியுமானால் விக்கிபீடியா எதற்கு என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்.
இதனிடையே எலான் மஸ்க் கருத்துக்கு ஒருவர், "விக்கிபீடியா பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதனையும் நீங்களே வாங்கி விடுங்கள்" என்று கூறினார். அதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை என எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |