எனது மகனுடைய அஸ்தியைக் கொடுங்கள்... ஒரு தாயின் கதறல்
சுவிட்சர்லாந்தில் மரணமடைந்த தனது மகனுடைய அஸ்தியை தன் சொந்த நாட்டில் புதைக்க திட்டமிட்டிருந்த ஒரு தாய்க்கு, பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மரணமடைந்த இளைஞர்
சுவிட்சர்லாந்தில் மரணமடைந்த இளைஞர் ஒருவரது உடலை சுவிட்சர்லாந்திலேயே தகனம் செய்துவிட்டு, அவருக்கு தங்கள் சொந்த நாட்டில் பெரிய அளவில் இறுதிச்சடங்கு செய்ய திட்டமிட்டிருந்தது சிசிலி நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம்.
அதன்படி, தபால் மூலமாக அவரது அஸ்தி சிசிலி நாட்டுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவரது அஸ்திக் கலசம் எங்கோ காணாமல்போய்விட்டது.
தபால் அலுவலகம் சார்பில் அதைத் தேடும் முயற்சிகள் தோல்வியில் முடியவே, அஸ்திக் கலசம் எங்கோ தவறிவிட்டதாக அந்த இளைஞரின் தாய்க்கு தகவலளித்த தபால் அலுவலகம், இழப்பீடாக 563 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்குவதாக தெரிவித்திருந்தது.
எனது மகனுடைய அஸ்தியைக் கொடுங்கள்...
ஆனால், தங்களுக்குப் பணத்தில் ஆர்வமில்லை என்று கூறிவிட்ட அந்த இளைஞரின் தாய், ஒரு அஸ்திக்கலசம் எப்படி காணாமல் போகும், அது யாரிடமாவது தவறுதலாக சென்று சேர்ந்திருக்கக் கூடும். தயவு செய்து தேடுவதை நிறுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார்.
தங்கள் நாட்டில் தங்கள் மகனுக்கு கௌரவமான முறையில் ஒரு இறுதிச்சடங்கு நடத்த தாங்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறும் அந்தப் பெண், எப்படியாவது எனது மகனுடைய அஸ்தியைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்கிறார்.
உண்மையில், அவர் இது தொடர்பாக நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, தபால் நிலையத்துக்கு ஆதரவாகவே தீர்ப்புக் கிடைக்கும் வகையில் சட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது சட்டத்தரணிகள், ஆகவே, வழக்கு பெரிய அளவில் பலனளிக்குமா என்பது சந்தேகமே என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |