சுவிஸ் பனிப்பாறைகள் உருகியதில், 50 ஆண்டுளுக்கு முன் மாயமான விமான பாகங்கள் கண்டுபிடிப்பு! வெளிவந்த புகைப்படங்கள்
1968-ஆம் ஆண்டு விபத்தில் காணமால் போன விமானத்தின் எச்சங்கள் கடந்த வாரம் சுவிஸ் ஆல்ப்ஸில் கண்டுபிடிக்கப்பட்டன.
அதேபோல், பனிப்பாறைகள் உருகிவருவதால் சில மனித எச்சங்களும் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகும் அளவிற்கு நிலவும் கடும் வெப்பத்தால், 50 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் வெளிவந்துள்ளன.
ஜங்ஃப்ராவ் மற்றும் மோஞ்ச் மலைச் சிகரங்களுக்கு அருகில் உள்ள வாலிஸ் மாகாணத்தில் உள்ள அலெட்ச் பனிப்பாறையில் சம்மேபத்தில் விமானத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
'ஜூன் 30, 1968 அன்று இந்த இடத்தில் விபத்துக்குள்ளான HB-OYL பதிவு செய்யப்பட்ட பைபர் செரோக்கியின் இடிபாடுகளில் இருந்து பாகங்கள் இருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது' என உள்ளூர் அதிகாரிகள் கூறினர். விரைவில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெறிவித்தனர்.
ஜூரிச்சைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அவரது மகன் ஆகியோர் அந்த விமானத்தில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் 24 Heures செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதும், சிதைந்து காணப்படும் அந்த விமானத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய மாதங்களில், சுவிஸ் பனிப்பாறைகளின் வெவ்வேறு இடங்களில் இரண்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் மலையேற்றத்திற்கு வந்தவர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் பனிக்கட்டியில் காணாமல் போனவர்கள்.
பனிப்பாறைகள் கரைந்து வருகின்றன. இது இப்படியே தொடர்ந்தால், 2090-ஆம் ஆண்டுக்குள் 10% பனிப்பாறைகள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்று கூறப்படுகிறது.