4 சிக்ஸர்கள், 40 பவுண்டரிகளுடன் 313 ஓட்டங்கள் விளாசல்! அடித்து நொறுக்கிய வீரர்
கிளப் கிரிக்கெட் வரலாற்றில் டேவிட் லாயிட் எடுத்த 313 தான் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்
க்ளாமோர்கன் அணிக்காக வெல்ஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்
கவுண்டி சாம்பியன் தொடரில் க்ளாமோர்கன் அணி வீரர் டேவிட் லாயிட் 313 ஓட்டங்கள் விளாசினார். கார்டிஃப்பில் டெர்பிஷைர் மற்றும் க்ளாமோர்கன் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
முதலில் ஆடிய க்ளாமோர்கன் அணி 5 விக்கெட் இழப்புக்கு 550 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான டேவிட் லாயிட் 313 ஓட்டங்கள் விளாசினார். அவர் 4 சிக்ஸர்கள், 40 பவுண்டரிகளுடன் இந்த ஸ்கோரை எடுத்தார்.
லாயிட் ஆட்டமிழக்காமல் நின்ற நிலையில், க்ளாமோர்கன் அணி டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய டெர்பிஷைர் அணி 253 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அனுஜ் தால் 92 ஓட்டங்கள் எடுத்தார்.
க்ளாமோர்கன் அணியின் தரப்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுக்களையும், வான் டெர் குக்ட்டேன் 3 விக்கெட்டுக்களையும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து டெர்பிஷைர் இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்கள் எடுத்துள்ளது.