பிரித்தானியாவில் ரயில் பயணிகள் மீது போத்தல் கொண்டு தாக்கிய நபர்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
கிளாஸ்கோ ரயிலில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோ ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல்
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 16ம் திகதி கிளாஸ்கோவிலிருந்து பெர்த் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த East Renfrewshire பகுதியை சேர்ந்த 48 வயது தாமஸ் கிரேக்(Thomas Craig) என்ற நபர் மதுபோதையில் சக பயணிகள் இரண்டு பேரை பயங்கரமாக தாக்கியுள்ளார்.

தனது இருக்கைக்கு எதிரே அமர்ந்து இருந்த நபருடன் முதலில் பேச தொடங்கிய நிலையில், 10 நிமிடங்களுக்குள் அவரை தகாத வார்த்தைகளால் பேச தொடங்கியுள்ளார்.
பின்னர் அவரை பக்ஃபாஸ்ட் மது போத்தலால் இரண்டு முறை தாக்கியுள்ளார், அத்துடன் அங்கிருந்து ஓடிய நபரை துரத்தி சென்று போத்தல் உடையும் வரை பலமாக தாக்கியுள்ளார்.
மேலும் அங்கிருந்த இரண்டாவது நபர் ஒருவரையும் தாமஸ் கிரேக் பலமாக தாக்கியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த தாமஸ் கிரேக் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கான தண்டனை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், விடுதலைக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு காவலர்களின் தீவிர கண்காணிப்பும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |