ரொட்டியில் கண்ணாடித்துண்டுகள்... திரும்பப்பெறும் பிரான்ஸ் பல்பொருள் அங்காடி
பிரான்சில் பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து வாங்கப்பட்ட ரொட்டிகளை உண்ணவேண்டாம் என அந்த அங்காடி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரான்சிலுள்ள Intermarché பல்பொருள் அங்காடியில் விற்கப்படும், வில்லை போடப்பட்ட ரொட்டிகளை பயன்படுத்தவேண்டாம், அவைகளை தூர எறிந்துவிடுங்கள், அல்லது திருப்பிக் கொடுத்தால் அதற்காக செலுத்தப்பட்ட கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என அந்த அங்காடி தெரிவித்துள்ளது.
அந்த ரொட்டிகளில் கண்ணாடித்துண்டுகள் இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Chabrior என்ற பிராண்ட் ரொட்டிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விவரங்களுக்கு...https://www.connexionfrance.com/French-news/Sliced-bread-recalled-from-French-supermarket-over-glass-shard-fears