Glass Skin வேண்டுமா? உங்களுக்கான குறிப்புகள்
Korean Glass Skin Tips: இன்றைய இளசுகளுக்கு கொரியன் நட்சத்திரங்கள் என்றால் அலாதி பிரியம், இதற்கு அவர்களது பளபளப்பான சருமமும் வசீகரமான தோற்றமும் முக்கிய காரணமாக இருக்கும்.
Glass Skin
Glass Skin என்றழைக்கப்படும் முகத்தில் துளைகளே இல்லாத கண்ணாடி போன்ற சருமத்திற்காக பலரும் மெனெக்கெடுகின்றனர், இதற்காக அவர்கள் விலையுயர்ந்த க்ரீம்களை பயன்படுத்துவதில்லை, மாறாக அழகு பராமரிப்பு என்பது அவர்களது வாழ்க்கை முறையுடன் ஒன்றிணைந்தது.
சீரான பராமரிப்பும், சருமத்திற்கு ஆழமான ஈரப்பதமும் இயல்பாகவே கண்ணாடி போன்ற சருமத்தை உங்களுக்கு வழங்கும்.

இதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய ஆறு முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Korean Beauty Tips
* இரவில் படுப்பதற்கு முன்பாக இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும், முதலில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தி கொள்ளுங்கள், இது அதிகப்படியான எண்ணெயை நீக்கும், தொடர்ந்து water-based foaming cleanserயை பயன்படுத்துங்கள்.
* முகத்தை கழுவிமுடித்தவுடன் துண்டை வைத்து வேகமாக துடைக்க வேண்டாம், மாறாக மென்மையாக ஈரப்பதத்தை போக்கவும்.
* பின்னர் watery toner பயன்படுத்திவிட்டு சீரம் பயன்படுத்தலாம், தொடர்ந்து லோஷன் பயன்படுத்தவும், இவ்வாறு செய்யும் போது சருமத்துறைகளை அடைக்காமல் உள்ளிருந்து பாதுகாக்கிறது.
* வெயில் காலங்களில் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் எல்லா காலநிலைகளிலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது.
* மிக முக்கியமாக சருமத்தை சுத்தப்படுத்த மெலிதான face scrubs பயன்படுத்தவும்.
