மேக்ஸ்வெல் பின்னே திரும்பி அடித்த சிக்ஸரால் ஆர்ப்பரித்த மைதானம்! வைரல் வீடியோ
மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் அடித்த சிக்ஸர் வீடியோ வைரலாகியுள்ளது.
ரெனெகேட்ஸ் 168
பிக்பாஷ் லீக்கின் இன்றையப் போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் (Melbourne Renegades) 7 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.
பெத்தேல் 49 (36) ஓட்டங்கள் எடுத்தார். சிடில், ஜோயல் பாரிஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டெகெடீ மற்றும் உஸாமா மிர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
HOW has he hit the stumps 🤯
— KFC Big Bash League (@BBL) January 4, 2025
That would have been the coolest run out ever! #BBL14 pic.twitter.com/sob6TAaRcP
பென் டக்கெட் 67
அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் (Melbourne Stars) அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பென் டக்கெட் (Ben Duckett) 67 (49) ஓட்டங்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) 48 (35) ஓட்டங்களும் விளாசினர்.
இப்போட்டியின் 19வது ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) ரிவர்ஸில் திரும்பி மிரட்டலாக சிக்ஸர் அடித்தார்.
அவர் அடித்த ஷாட் மிக உயர பறந்து சிக்ஸராக மாறியதால், மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும் இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
MAXI-MUM 🙌@GMaxi_32 with the reverse lap for SIX! #BBL14 pic.twitter.com/zys2SsBaY4
— KFC Big Bash League (@BBL) January 4, 2025
கடைசிவரை களத்தில் நின்ற மேக்ஸ்வெல் 10 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 20 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |