சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த க்ளென் மேக்ஸ்வெல்
Glenn maxwell retires from international cricket: அவுஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
38 வயதாகும் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரான க்ளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
க்ளென் மேக்ஸ்வெல்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரராக மிரட்டி வரும் க்ளென் மேக்ஸ்வெல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகினார்.
அதன் பின்னர் சர்வதேச டி20 மற்றும் லிஸ்ட் ஏ, முதல் தர கிரிக்கெட், பிக் பேஷ் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக க்ளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.
தனது சொந்த மைதானத்தில் விடைபெறும் வகையிலான ஒரு போட்டியில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருந்ததாக தெரிவித்த மேக்ஸ்வெல், பிக் பேஷ் லீக் (Big Bash League) தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார்.

அந்த அணி க்ளென் மேக்ஸ்வெலை 2027-28 சீசன் இறுதிவரை விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. க்ளென் மேக்ஸ்வெல் 130 சர்வதேச டி20 போட்டிகளில் 2,897 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோராக ஒரு போட்டியில் 145 ஓட்டங்கள் எடுத்திருக்கிறார்.
