Viral video: ஆபத்தான பாம்பை பிடித்த பிரபல பவுலர்! பதறவைக்கும் காட்சி
பாம்பு என்று சொன்னால் படையே நடுங்கும் என சொல்வார்கள். உலகின் மிகவும் விசித்திரமான மற்றும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகளும் முதன்மையாக உள்ளன.
காட்டுப் பகுதிகள், மனித நடமாட்டம் குறைவான இடங்களில் இவை அதிகம் தென்பட்டாலும், குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது நுழைவதுமுண்டு.
அந்த வகையில், ஒரு பிரபலமும் தனது வீட்டில் புகுந்த பாம்பு ஒன்றை தானே அப்புறப்படுத்தும் வீடியோ ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் மூத்த கிரிகெட் வீரரான கிளென் மெக்ராத் தான் இத்தகைய ஆபத்தான செயலை செய்தவர். அவரது மனைவி அந்த வீடியோவை எடுத்துள்ளார்.
அவர் அந்த வீடியோவில், அவரது வீட்டில் புகுந்த பாம்பு ஒன்றை, வெறும் வீடும் துடைக்க பயன்படும் மாப்பை வைத்து அப்புறப்படுத்துவதை காணலாம்.
இரண்டு மூன்று முறை அந்த பாம்பை மாப் குச்சியை வைத்து தூக்க முயன்றபோது, அது சீற்றமடைந்து அவரை தாக்க முற்பட்டது பதைபதைப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவியும் அவரை எச்சரிப்பதை வீடியோவில் கேட்க முடிகிறது. இருப்பினும் மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்ட மெக்ராத் பாம்பை லாவகமாக தூக்கி, வெளியே கொண்டு சென்றார்.
மெக்ராத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோவில் "மனைவி சரலேயனின் ஊக்கம் மற்றும் ஆதரவால் வீட்டில் இருந்த 3 கோஸ்டல் கார்பட் மலைப்பாம்புகளை பாதுகாப்பாக வெளியே இருக்கும் புதர்களில் விடப்பட்டது" என கூறியுள்ளார்.
வீடியோவில் ஒரு பாம்பை மட்டும் காட்டினாலும், அவர் மூன்று பாம்பை வெளியேற்றியதாக இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |