இலங்கை வீரர் தவறவிட்ட எளிதான கேட்ச்! மிரட்டலாக சதம் விளாசிய வீரர்
நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் இரண்டாவது சதம் விளாசல்
எளிதான கேட்சை நிசங்கா தவறவிட்டதால் விரக்தியடைந்த ஹசரங்கா
சிட்னியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான போட்டியில் கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம் விளாசினார்.
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய நிலையில், 15 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அப்போது 12 ஓட்டங்களில் இருந்த கிளென் பிலிப்ஸ் அடித்த ஷாட், இலங்கையின் நிசங்காவிடம் கேட்சாக சென்றது. ஆனால் எளிதாக வந்த கேட்சை அவர் தவறவிட்டார்.
— Richard (@Richard10719932) October 29, 2022
இதனால் பந்துவீசிய ஹசரங்கா விரக்தியடைந்தார். அதன் பின்னர் நிலைத்து நின்று ஆடிய பிலிப்ஸ் அதிரடியாக அரைசதம் அடித்தார். மேலும் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 61 பந்துகளில் சதமடித்தார்.
Glenn Phillips brings up a phenomenal hundred, his second in T20Is ?#T20WorldCup | #NZvSL | ?: https://t.co/7YevVnQdfG pic.twitter.com/4WydiUhzyw
— ICC (@ICC) October 29, 2022
இது அவருக்கு இரண்டாவது சர்வதேச டி20 சதம் ஆகும். பிலிப்ஸ் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸருடன் 104 ஓட்டங்கள் விளாசினார். அவரது மிரட்டலான ஆட்டத்தினால் நியூசிலாந்து அணி 167 ஓட்டங்கள் குவித்தது.
Congratulations Glenn Phillips #century #worldcup #T20WorldCup #NZvSL pic.twitter.com/g8359rHP1r
— Universal9168 (@Universal9168) October 29, 2022