6 சிக்ஸர்கள்! தெறிவிக்கவிட்ட வீரர்..தவிடுபொடியான அணி
- ஒபேட் மெக்காய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் விளாசினார்
- நியூசிலாந்தின் சான்ட்னர், பிரேஸ்வெல் இருவரும் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றி பெற்றது.
கிங்ஸ்டனில் நியூசிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது. நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
கப்தில் 20 ஓட்டங்களிலும், கான்வே 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் 4 ஓட்டங்களில் வெளியேற, க்ளென் பிலிப்ஸ் மற்றும் டெரில் மிட்சேல் இருவரும் மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட பிலிப்ஸ் 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் விளாசி 76 ஓட்டங்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்த மிட்செல் 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்கள் குவித்தது.
PC: Twitter
மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் மெக்காய் 3 விக்கெட்டுகளும், ஷெப்பர்ட் மற்றும் ஓடியன் ஸ்மித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி சான்ட்னர், பிரேஸ்வெல் சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
PC: Twitter
இதனால் ஓட்டங்கள் எடுக்க தடுமாறிய அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் மற்றும் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளையும், சௌதீ, சோதி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி 14ஆம் திகதி நடைபெற உள்ளது.