ஒரே ஆண்டில் கோடீஸ்வரர் அந்தஸ்தை இழந்த பல மில்லியன் பணக்காரர்கள்: விரிவான தகவல்கள்
கடந்த ஓராண்டில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் தங்கள் கோடீஸ்வரர் அந்தஸ்தை இழந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2008 நிதி நெருக்கடி நிலைக்கு பின்னர் முதன்முறை என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
உலகளாவிய சொத்துமதிப்பு சரிவு
1 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள் எண்ணிக்கை 2021ல் 62.9 மில்லியனில் இருந்து 2022ல் 59.4 மில்லியன் என சரிவடைந்துள்ளது.
@reuters
சுவிட்சர்லாந்தின் யுபிஎஸ் வங்கி வருடாந்திர அறிக்கையில் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த பணவீக்கம் மற்றும் டொலருக்கு எதிரான பல நாணயங்களின் சரிவு ஆகியவற்றால் உலகளாவிய சொத்துமதிப்பு சரிவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் 22.7 மில்லியன் என இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 1.8 மில்லியன் என சரிவடைந்துள்ளது. சீனாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை தற்போது 6.2 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில், 2.6 மில்லியன் என இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 440,000 என சரிவடைந்துள்ளது. ஜப்பானில் 3.2 மில்லியன் என இருந்த எண்ணிக்கை 2.6 மில்லியன் என சரிவடைந்துள்ளது.
1.4 ட்ரில்லியன் டொலர் இழப்பு
அவுஸ்திரேலியாவில் 360,000 எண்ணிக்கை சரிவடைந்து தற்போது மொத்தமாக 1.8 மில்லியன் பேர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர். மேலும், 50 மில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துமதிப்பு கொண்ட கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 22,500 சரிவடைந்து தற்போது 243,000 என எட்டியுள்ளது.
@reuters and getty
மட்டுமின்றி, 2022ல் உலகின் முதல் 500 கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பில் 1.4 ட்ரில்லியன் டொலர் அளவுக்கு இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
2022ல் எலான் மஸ்க் மட்டும் 138 பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார். பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 2022ல் 81 பில்லியன் டொலர்களை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |