பிரித்தானிய சாலையில் தரையிறங்கிய விமானம்: உயிரிழப்புகள் இல்லை என அறிவிப்பு
பிரித்தானியாவின் க்ளுசெஸ்டருக்கு அருகில் உள்ள பரபரப்பான சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசர தரையிறக்கம் செய்துள்ளது.
சாலையில் தரையிறங்கிய விமானம்
பிரித்தானியாவில் க்ளுசெஸ்டர்(Gloucester) மற்றும் செல்டென்ஹாம்(Cheltenham) பகுதிக்கு இடைப்பட்ட கோல்டன் வேலி பைபாஸ் சாலையில் மாலை 6 மணியளவில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரகால தரையிறக்கம் செய்துள்ளது.
இந்த விமான தரையிறக்க சம்பவத்தை தொடர்ந்து பைபாஸ் சாலையின் இருபுறமும் போக்குவரத்து சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது.
Grant Miles / SWNS
மேலும் உடனடியாக அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது, அத்துடன் இதில் வேறு எந்த வாகனங்களும் சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த சேதம்
சிறிய ரக விமானத்தின் அவசர கால தரையிறக்கத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெளியான புகைப்படங்களை கொண்டு விமானத்தின் அவசரகால தரையிறக்கத்தால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
விமானம் தரையிறங்குவதை நேரில் பார்த்த சாட்சியான 17 வயது வெஸ்பர் கிரே ஸ்மித், விமானம் தரையிறங்குவதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன், ஏனென்றால் இது அடிக்கடி நடக்கும் சம்பவம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |