வெளிநாட்டில் விடுமுறையா? சுவிஸ் மக்கள் தெரிந்திருக்க வேண்டிய கொரோனா விதிமுறைகள்
உலக நாடுகளில் கொரோனா தொற்றின் புதிய ஓமிக்ரான் மாறுபாடு பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு செல்லும் மக்கள் கட்டாயம் புதிய விதிமுறைகளை தெரிந்திருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் தனிமைப்படுத்துதல் கட்டாயமா? அல்லது PCR சோதனை முன்னெடுக்க வேண்டுமா? இரு தடுப்பூசிகள் போதுமானதா? அல்லது பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டுமா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு உரிய பதில்களை நிபுணர்கள் தொகுத்து வழங்கியுள்ளனர்.
ஜேர்மனியில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆபத்து மிகுந்த பகுதியாக சுவிட்சர்லாந்தை ஜேர்மன் நிர்வாகம் அறிவித்துள்ளதால், முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
முழுமையாக தடுப்பூசி போடாதவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம். ஆனால் 24 மணி நேரம் மட்டும் ஜேர்மனியில் தங்கிச்செல்லும் பயணிகளுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் செல்ல பூஸ்டர் தடுப்பூசி அல்லது PCR சோதனை முடிவுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரியாவிலும் பயணத்திற்கு முன்னர் பதிவு செய்து கொள்வது அவசியம். இருப்பினும் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டவர்களை மட்டுமே உணவகங்கள், அருங்காட்சியகங்கள், கடைகளுக்கு அனுமதிக்கின்றனர். இத்தாலிக்கு செல்லும் மக்கள் அனைவரும் கொரோனா சோதனை முன்னெடுப்பதை கட்டாயமாக்கியுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு கூடுதலாக 5 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிக்கப்பட்டுள்ளது. போர்த்துகல் நாட்டில் PCR சோதனை முடிவுகள் கட்டாயம். மட்டுமின்றி இணையமூடாக பதிவு செய்வதும் அவசியம்.
பிரித்தானியாவில் அனைத்து தரவுகளையும் இணையமூடாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பயணம் முன்னெடுப்பதற்கு முன்னர் PCR சோதனை முடித்திருக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். கூடிதலாக பிரித்தானியாவுக்கு சென்ற பின்னர் 2வது நாளும் 8வது நாளும் PCR சோதனை முன்னெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.