ரூ.1,400 கோடிக்கு சொத்து.. லண்டன் மற்றும் துபாயில் Apartment: யார் இந்த கோவா வேட்பாளர்?
கோவாவில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் சொத்து மதிப்பு மிரள வைக்கும் அளவுக்கு உள்ளது.
பாஜக வேட்பாளர்
வரும் மக்களவை தேர்தலில் தெற்கு கோவா தொகுதியில் பாஜக சார்பில் பல்லவி (49) என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கணவருடன் சேர்ந்து தனக்கு ரூ.1,400 கோடியில் சொத்துகள் உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதில், வேட்பாளர் பல்லவியும், கணவர் ஸ்ரீனிவாஸ் டெம்போவும் கால்பந்து, ரயில் எஸ்டேட், கப்பல் கட்டும் தொழில், கல்வி முதல் சுரங்கம் ஆகிய துறைகளில் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லவிக்கு ரூ.255.4 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.28.2 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது.
ஸ்ரீநிவாசுக்கு ரூ.994.8 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.83.2 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளது.
இவர்களுக்கு கோவாவை தவிர நாட்டின் பல இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இதை தவிர லண்டனில் ரூ.10 கோடி மதிப்புள்ள குடியிருப்பும், துபாயில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள குடியிருப்பும் உள்ளது. மேலும், பல்லவியிடம் ரூ.5.7 கோடி மதிப்பு தங்கம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |