எலக்ட்ரிக் பைக்குகளுக்கு 50 சதவீதம் சலுகை - கோவா பைலட் சங்கத்தின் புதிய முயற்சி
கோவா மாநிலத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், Goa Motorcycle Taxi Rider’s Association புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மின்சார மோட்டார் சைக்கிள்கள் வாங்கும் முதல் 500 உறுப்பினர்களுக்கு 50 சதவீதம் நிதி உதவு வழங்கப்படும்.
"இது அரசு வழங்கும் திட்டமல்ல. CSR நிதியின் மூலம் ஒவ்வொரு வாகனத்திற்கு சுமார் ரூ.40,000 நரை நிதி உதவி பெற முயற்சி செய்கிறோம்' என சங்கத் தலைவர் சுரேஷ் தாக்கூர் தெறிவித்துள்ளார்.
ஒரு மின்சார மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ரூ.80,000 ஆகும்.
கோவாவில் தற்போது 2,000-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் டாக்சி ஓட்டும் பைலட்கள் உள்ளனர்.
இந்த திட்டம் முதியவர்களாகிவிட்ட பைலட்கள் இடையே இளைஞர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. புதியவர்களுக்கு தற்போதுள்ள இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Goa Electric Bike Subsidy, Motorcycle taxi EV scheme Goa, Goa 50 percent dicount on electric bikes