ஹொட்டல் சுவையில் அட்டகாசமான கோபி மஞ்சூரியன்.., வீட்டிலேயே செய்யலாம்
கோபி மஞ்சூரியன் ஒரு பிரபலமான இந்தோ-சீன உணவாகும்.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும்.
அந்தவகையில், சுவையான கோபி மஞ்சூரியன் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காலிஃபிளவர்- 1
- மைதா- ½ கப்
- சோள மா- ¼ கப்
- இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- நறுக்கப்பட்ட பூண்டு- 1 ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி- 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 2
- வெங்காயம்- 1
- குடைமிளகாய்- 1
- சோயா சாஸ்- 3 ஸ்பூன்
- தக்காளி கெட்ச்அப்- 2 ஸ்பூன்
- மிளகாய் சாஸ்- 1 ஸ்பூன்
- வினிகர்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் காலிஃபிளவரை சுத்தம் செய்து வெட்டி கொதிக்கின்ற தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் காலிஃபிளவர் பூக்களை சேர்த்து 5 நிமிடம் கழித்து தனியாக எடுத்துவைக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து வெந்நீரில் வைத்த காலிஃபிளவர் சேர்த்து மாவில் நன்கு கலக்கவும்.
அடுத்து வாணலியில் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் காலிஃபிளவரை பொரித்து எடுக்கவும்.
பின்னர் மற்றொரு கடாயில், எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து சோயா சாஸ், தக்காளி கெட்ச்அப், சில்லி சாஸ், வினிகர், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் ½ கப் தண்ணீரை ஊற்றி, சாஸை கொதிக்கவைத்து சாஸில் தண்ணீரில் கார்ன்ஃப்ளார் கலந்து சேர்க்கவும்.
சாஸ் கெட்டியாகி வந்ததும் அதில் வறுத்த காலிஃபிளவர் சேர்த்து கிளறினால் சுவையான கோபி மஞ்சூரியன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |