காட்ஃபாதர் பிரபலம் காலமானார்: தமிழ் நடிகை சமந்தா இரங்கல்..சோகத்தில் திரையுலகம்
ஹாலிவுட்டின் பிரபலமான நடிகையான டயான் கீட்டன் தனது 79 வயதில் கலிபோர்னியாவில் காலமானார்.
டயான் கீட்டன்
காட்ஃபாதர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டயான் கீட்டன் (Diane Keaton). இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதும் வென்றுள்ளார்.
79 வயதான டயான் கீட்டன் கலிபோர்னியாவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு உலகளவில் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1968ஆம் ஆண்டில் மேடை நாடகத்தில் நடிக்கத் தொடங்கிய டயான் கீட்டன், லவ்வர்ஸ் அண்ட் அதர் ஸ்ட்ரேஞ்சர்ஸ் (1970) என்ற படத்தின் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 54 ஆண்டுகளாக நடிப்பில் பங்களிப்பை அளித்த டயான், கடைசியாக 2024யில் வெளியான சம்மர் கேம்ப் படத்தில் நடித்திருந்தார்.
பிரபலங்கள் இரங்கல்
நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் டயான் கீட்டனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டயான் கீட்டனுடன் நடித்த பிரபல நட்சத்திரமான லியோனார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒரு தனித்துவமானவர், புத்திசாலித்தனமானவர், வேடிக்கையானவர் மற்றும் மன்னிப்பு கேட்காதவர்...அவரை மிகவும் மிஸ் பண்ணுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ் நடிகையான சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டயான் கீட்டனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |