கடவுளிடம் ஒரு திட்டம் உள்ளது - வெற்றி குறித்து பேசிய கோலி
நாங்கள் நேர்மையாக கடின உழைப்பை செலுத்தி விளையாடினோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
16 ஆண்டுகளாக ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றப் போராடி வரும் பெங்களூரு அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி அடிப்படையில் பிளேஆஃப் சென்றுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Mandatory MahiRat moment from the match to take us on a nostalgic trip. ?❤#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK pic.twitter.com/mq5JOeNo9F
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 19, 2024
இதற்கிடையில் வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, ''கடவுளிடம் ஒரு திட்டம் உள்ளது. நீங்கள் செய்யும் விடயத்தில் நேர்மையாக இருந்தால் போதும்..நாங்கள் நேர்மையாக கடின உழைப்பை செலுத்தி விளையாடினோம்..பலனை பெற்றுள்ளோம்..! இதற்குமேல் நான் எதையும் கூற விரும்பவில்லை. அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
Good night, 12th Man Army. ? pic.twitter.com/3aXYxbmXhQ
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |