'கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கருக்கு மும்பையில் சிலை! ரசிகர்கள் கொண்டாட்டம்
'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆள் உயர சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கருக்கு சிலை
ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பையில் உள்ள சின்னமான வான்கடே மைதானத்தில் உயரமான சிலை நிறுவப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பையின் போது இந்த சிலை திறக்கப்படும்.
இந்த அறிவிப்புக்கு பிறகு சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
வான்கடே மைதானத்தில் முதல் சிலை
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) தலைவர் அமோல் காலே இது குறித்து கூறுகையில், "வான்கடே மைதானத்தில் இது முதல் சிலையாகும், அது எங்கு வைக்கப்படும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.
சச்சின் சார் ஒரு பாரத ரத்னா, அவர் கிரிக்கெட்டுக்காக என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு 50 வயதாகும் போது, அது MCA வழங்கும் ஒரு சிறிய பாராட்டுக்குரியதாக இருக்கும். நான் மூன்று வாரங்களுக்கு முன்பு அவருடன் பேசினேன், அவருடைய ஒப்புதல் பெறப்பட்டது” என்று காலே கூறினார்.
இதற்கு முன்னதாக, விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் ஸ்டேடியம், ஆந்திராவில் உள்ள VDCA ஸ்டேடியம் மற்றும் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியம் ஆகியவற்றில் முன்னாள் இந்திய ஜாம்பவான் CK நாயுடுவின் மூன்று தனி சிலைகள் மட்டுமே உள்ளன.