கடவுளின் கருணைக்காய் காத்திருக்கிறோம்... பிரான்ஸ் தீயணைப்பு வீரர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த பதில்?
*பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ காடுகளை கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது.
*பிரான்சின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ காடுகளையும் அதிலுள்ள உயிரினங்களையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் நிலையில், கடவுளின் கருணைக்காக, காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்கள் பிரான்ஸ் தீயணைப்புத் துறையினர்.
அவர்கள் பிரார்த்தனைக்கு கடவுள் பதிலளித்துவிட்டாரோ என்றே தோன்றுகிறது.
Image -BBC
பிரான்சின் தெற்குப் பகுதியில் பற்றிய காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தங்கள் காடுகள் தீப்பற்றி எரிவதைக் காண கவலையாக இருக்கிறது என்று கிட்டத்தட்ட கண்ணீர் விட்ட தீயணைப்புத் துறையினர், கடவுளின் கருணைக்காக, மழைக்காக, பனிக்காக காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்கள்.
Image -BBC
அவர்களுடைய பிரார்த்தனைக்கு பதில் கிடைத்தாற்போல், தென்மேற்கு பிரான்சில் திடீரென காற்று அடங்க, மழை கொட்டித்தீர்க்க, காட்டுத்தீ கட்டுக்குள் வந்திருக்கிறது.
இதற்கிடையில், தற்செயலாக காட்டுத்தீயை உருவாக்கிய உள்ளூர் நபர் ஒருவரைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Image -BBC
Image -BBC
Image -BBC
Image -BBC