கொரோனா பாதித்த பிரித்தானிய மகாராணிக்காக உருகும் மக்கள்! விரைவில் குணமாக விருப்பம்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் விரைவில் அதிலிருந்து குணமாக வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பெருந்தொற்றில் இருந்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்யும் நிலையில் முக்கிய புள்ளிகளும் மகாராணி விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தியுள்ளனர்.
அதன்படி ராணி இருக்கும் Windsor Castle வாயில்களில் சிலர் நேற்று கூடினார்கள். ஓன்லைனிலும் பலர் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர், லண்டன் சுரங்க இரயில்களில் உள்ள செய்தி பலகையில் தொற்றை எளிதாக எடுத்து கொள்ளுங்கள் ராணி என எழுதியுள்ளனர்.
உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் என்ற பெருமையை கொண்ட மகாராணி கடந்த அக்டோபரில் மருத்துவமனையில் ஒரு இரவைக் கழித்த பின்னர், அவரது உடல்நிலை குறித்த அச்சம் அதிகமானது.
இப்படி அவர் உடல்நிலை இருக்கும் போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பலரையும் கவலையடைய செய்துள்ளது. இதையடுத்து கடவுளே மகாராணியை காப்பாற்றுங்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
19 வயதான கிரட் ஸ்மித் என்பவர் கூறுகையில், மகாராணிக்கு கொரோனா என்ற செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. ஏல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். விரைவில் அவர் குணமாவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
இப்படி பலரும் மகாராணி விரைவில் குணமாக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.