ஒருவரின் வீட்டில் சட்டப்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
பொதுவாக பலரும் தங்க நகைகளை ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
குறிப்பாக, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தங்க நகைகளை பெற்றோர்கள் ஆரம்பம் முதலே சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.

அந்தவகையில், சட்டப்படி ஒருவரின் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று பார்ப்போம்.
ஒருவர் அறிவிக்கப்பட்ட வருமானம், பரம்பரை சேமிப்பு போன்ற முறையான மூலங்களிலிருந்து வாங்கியிருந்தால், வீட்டில் எவ்வளவு வேணாலும் தங்கம் வைத்திருக்கலாம்.
வரி சோதனைகளின் போது, முறையான ஆதாரம் இல்லையெனினும் திருமணமான பெண்ணுக்கு 500 கிராம் வரை, திருமணமாகாத பெண்ணுக்கு 250 கிராம் வரை, ஆணுக்கு 100 கிராம் வரை தங்கம் பறிமுதல் செய்யப்படாது.

தங்கம் வாங்கிய பில்கள் அல்லது பரம்பரை சொத்து போன்ற முறையான ஆவணங்கள் இருந்தால் வரம்புகளை விட அதிகமாக தங்கம் வைத்திருக்கலாம்.
வருமான வரி சோதனையின் போது கூட முறையான ஆவணங்கள் இருந்தால் உங்களிடம் எவ்வளவு தங்கம் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும்.| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |