சந்தை பதற்றநிலையிலும் வெற்றி பெற்ற தங்கம்., கிரிப்டோ தோல்வி
சந்தை பதற்றநிலைக்கு மத்தியில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கிரிப்டோ மதிப்பு சரிந்துள்ளது.
2025-ம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் வரை உலக சந்தைகள் பதற்றமடைந்தன. அமெரிக்கா ஏற்றுமதிக்கு கடுமையான வரிகள் விதித்ததால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நாடினர்.
இந்த நிலையில், தங்கம் 15 சதவீதம் உயர்ந்தது. ஆனால், Bitcoin 1 சதவீதம் குறைந்தது.
இது கிரிப்டோ நாணயங்கள் சந்தை பதற்றத்தில் பாதுகாப்பான முதலீடாக செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

தங்கம், வரலாற்று ரீதியாக பணவீக்கத்துக்கும் பொருளாதார சிக்கல்களுக்கும் எதிரான பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
இது ஒரு உண்மையானம் மற்றும் திடமான உடைமையாக இருப்பதால், எந்த சூழ்நிலையிலும் மதிப்பை இழக்காது. 2025-ம் ஆண்டு தங்கம் 44 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிட்காயின் போன்ற கிரிப்டோ நாணயங்கள், தங்கம் போலல்லாமல் அரசு கட்டுப்பாடின்றி இயங்குகின்றன. ஆனால், அவை முற்றிலும் டிஜிட்டல் (digital).
பெரிய பொருளாதார நெருக்கடியில், பிட்காயினை மீட்பது சாத்தியமா என்பது கேள்விக்குறி. மேலும், பிட்காயின் மட்டுமல்லாமல் பல புதிய கிரிப்டோ நாணயங்கள் உருவாகின்றன. இது முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
பிட்காயின் 2025-ல் 13 சதவீதம் உயர்ந்தாலும், அது தங்கம் அளவிற்கு பாதுகாப்பான முதலீடாக இல்லை.
கிரிப்டோ நாணயங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி பெறலாம். ஆனால், சந்தை பதட்டத்தில் தங்கம் போல பாதுகாப்பு வழங்க முடியாது என்பதுதான் நிபுணர்களின் கருத்து.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
gold vs bitcoin 2025, crypto market stress test, bitcoin fails safe haven test, gold investment 2025, bitcoin vs gold performance, inflation hedge gold, crypto volatility 2025, gold price surge 2025, bitcoin decline April 2025 safe haven assets comparison