உலகளவில் தங்கத்தின் தேவை வரலாறு காணாத உயர்வு
2025-ஆம் ஆண்டில் உலகளவில் தங்கத்தின் தேவை புதிய சாதனையை எட்டியுள்ளது. மொத்த தேவை 5,000 டன்களை கடந்துள்ளது.
முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதுவதால் இவ்வளவு தேவை ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
World Gold Council (WGC) வெளியிட்ட அறிக்கையின்படி, தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களின் தேவை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது.
குறிப்பாக, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

முதலீட்டு தங்கம் (Investment Gold)- ETFs, கட்டிகள், நாணயங்கள் ஆகியவற்றின் தேவை 2025-ல் பெரிதும் உயர்ந்துள்ளது. ETF-களில் மட்டும் 800 டன் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.
நகைத் துறை: சில பகுதிகளில் நகை தேவையில் சிறிய வீழ்ச்சி இருந்தாலும், இந்தியா மற்றும் சீனாவில் திருமணங்கள், விழாக்கள் காரணமாக நகை வாங்குதல் தொடர்ந்து வலுவாக உள்ளது.
உலக அரசியல் பதற்றம், பங்குச் சந்தை மாற்றங்கள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஆகியவை தங்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் கையிருப்பாக வைத்திருப்பது சந்தை நிலையை வலுப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |